இலங்கையில் கனமழைக்கு 8 பேர் பலி: பல இடங்களில் நிலச்சரிவு அபாயம்

REINஇலங்கையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் வயர்களும் சேதம் அடைந்துள்ளதால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் சாலைகள் துண்டிக்கபட்டுள்ளன. 8 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சென்றது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கன மழைக்கு ஒரு குழந்தை உட்பட 8 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இடைவிடாது இடியுடன் கூடிய கனமழை நாடு முழுவதும் பெய்யும் என்று இலங்கை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், நிலச்சரிவு ஏற்படும் இடங்கள் மற்றும் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தலைநகர் கொழும்புவில் தாழ்வான பகுதிகளில் வசித்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாம்களுக்கு ஏற்கனவே அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு நிலை இடம் பெயர்ந்துள்ளதால், இனி மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply