சீரற்ற காலநிலை பல பகுதிகளிலும் பாடசாலைகள் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு அபாயம் நிலவுவதால் பல மாவட்டங்களிலும் பாடசாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு வலயக் REINகல்வி பணிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர்.அதன்படி, மாத்தளை தொடந்தெனிய வித்தியாலயம், வடமேல் மாகாணத்தில் 25 பாடசாலைகளும் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.தெதுரு ஓயா மற்றும் மீ ஓயா பெருக்கெடுத்தோடுவதால் வெள்ளம் காரணமாக புத்தளம், நிகவெரடிய, சிலாபம், கிரிஉல்ல ஆகிய கல்வி வலயங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply