27000 பாடையினர் உயிர்களை அர்ப்பணிப்பு செய்து மீட்ட நாட்டை காட்டிக் கொடுக்க அரசு முயற்சிக்கின்றது:விமல் வீரவன்ச
அண்மையில் பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்களின் ஆதரவை பெற்றுக் கொண்டு தமிழர் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.
இதற்கிடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் ஒரே நேரத்தில் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். அத்தோடு பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இவ் அனைத்து நிகழ்ச்சி நிரல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் முயற்சிக்கும் வடகிழக்கு ஒற்றையாட்சியை பெற்றுக் கொள்ளும் விடயமே முன்னெடுக்கப்படுகிறது.
27000 படையினர் தங்களது உயிர்களை அர்ப்பணித்து பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து பிரிவினையை தடுத்தனர். ஆனால் இன்று மைத்திரி, ரணில் அரசாங்கம் படையினரை காட்டிக் கொடுத்து புலிப் பயங்கரவாதிகளின் தேவைகளை நிறைவேற்றுகின்றது.
விக்கினேஸ்வரன் அதற்காக அடிப்படை நடவடிக்கைகளையும் படிப்படியாக முன்னெடுக்கின்றார். மோடி மறுபுறம் தனது நாடகத்தை அரங்கேற்றுகிறார். இவ்வாறு நாட்டை காட்டிக் கொடுக்கும் முயற்சி முன்னெடுக்கப்படுகின்றன.இதனை நாம் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்பதாக சொன்னோம். ஆனால் யாரும் கேட்கவில்லை.
இன்று நாம் சொன்னது அனைத்தும் உண்மையாகிக் கொண்டிருக்கின்றன என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply