நாளை தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் தேர்தல் ஆணையம்

eletionகடந்த திங்கள்கிழமையன்று வாக்குப்பதிவு நடந்துள்ள தமிழகத்தின் 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, நாளை 19-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைககள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி போன்ற கல்விக் கூடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அப்பகுதிகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கட்டிடங்களில், கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில், முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படும் என்றும், ஒவ்வொரு ஐந்து நிமிட இடைவெளியில் வாக்கு எண்ணிக்கை விவரங்கள் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.மேலும், அதிக மழை பெய்து வரும் பகுதிகளில் பாதுகாக்கப்பட்டுள்ள வாக்கு மின் இயந்திரங்கள் பாதிப்படையாமல் உள்ளதை தேர்தல் ஆணையம் உறுதி செய்து வருகிறது.

இதனிடையே, தேர்தல் வாக்குப்பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளுவது குறித்து ஆராய தேர்தல் ஆணையம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

அரசு அதிகாரிகளை கொண்டுள்ள அந்த குழுவில், பொது பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பார்வையாளர்கள் என மொத்தமாக 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் அதிக அளவிலான பணம் மற்றும் பரிசு பொருட்கள் கைப்பற்றப்பட்டது குறித்தான விசாரணையை சிறப்பு குழுவினர் இன்றும் நாளையும் மேற்கொள்கின்றனர்.

விசாரணை குழுவினர் அவர்களது அறிக்கையை நாளை 19 ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறி இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply