பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ஜனாதிபதியின் செயலாளர் அழைப்பு
கடந்த சில தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இதுவரை சுமார் ஒரு இலட்சம் குடும்பத்தினர் இடம்பெயர்ந்துள்ளனர். ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய இக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியினை ஏற்கனவே அரசு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களினூடாக துரிதமாக முன்னெடுத்து வருகின்ற அதேவேளை, இப்பணிக்கு தம்மால் இயன்ற உதவிகளை வழங்குமாறு மனிதநேயம் கொண்ட கொடையாளிகளிடம் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் பணிவுடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதவிபுரிய விரும்பும் கொடையாளிகள் வழங்கும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மாவட்ட செயலகங்களில் உதவிகளை ஏற்றுக்கொள்ளும் நிலையங்கள் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
குடிநீர், உலர் உணவு, பால்மா, குழந்தைகளுக்கான பால்மா, உடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை உதவிகளாக இந்நிலையங்களில் கையளிக்கலாம்.
அவ்வாறு கையளிக்கப்படும் உதவிகள் மாவட்ட செயலாளர்களின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply