வங்காளதேசத்தில் வங்கி அதிகாரியின் கம்ப்யூட்டர் வழியாக ரூ.535 கோடி திருட்டு
வங்காளதேசத்தில் மத்திய வங்கி அதிகாரி ஒருவரின் கம்ப்யூட்டரில் சட்டவிரோதமாக புகுந்து 81 மில்லியன் டாலர் (சுமார் ரூ.535 கோடி) திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மணிலாவில் வங்காளதேச தூதர் ஜான் கோம்ஸ் நேற்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். இது தொடர்பாக அவர் கூறும்போது, “வங்காளதேச மத்திய வங்கி அதிகாரியின் கம்ப்யூட்டரில் திருட்டுத்தனமாக புகுந்து பணத்தை கொள்ளையடித்தவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்களும் அல்ல. வங்காளதேசத்தினரும் அல்ல” என கூறினார்.
மேலும் அவர் கூறும்போது, “இந்த இணையவழி திருட்டில் வங்காளதேசத்தை சேர்ந்த யாருக்கும் தொடர்பு உண்டு என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை” என குறிப்பிட்டார்.
வரலாற்றில் இணையவழியில் இப்படி ஒரு பெரிய தொகை திருடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என தகவல்கள் கூறுகின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply