துருக்கியின் புதிய பிரதமராக பினாலி இல்டிரிம் தேர்வாகிறார்

pinaliதுருக்கியில் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சி (ஏ.கே. கட்சி) ஆட்சி செய்கிறது. பிரதமராக இருந்த அகமட் டாவுடோகுலுவுக்கும், அதிபர் எர்டோகனுக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த விரிசல் வெளிப்படையாக தெரியவந்ததையடுத்து கடந்த 4-ம் தேதி பிரதமர் அகமட் பதவி விலகினார்.இதையடுத்து புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக ஆளுங்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறை மந்திரியாக இருக்கும் பினாலி இல்டிரிம் பிரதமர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பெயர் மட்டுமே கட்சியால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கட்சியின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக அவரது பெயர் அங்கீகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் அவர் பிரதமராக முறைப்படி பதவியேற்பார். அவர், அதிபர் எர்டோகனுடன் இணக்கமாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்துவதாக இல்டிரிம் உறுதி அளித்துள்ளார்.

துருக்கி அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் சூழ்நிலையில், பிரதமர் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply