துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிகமாக மூடல்

1024px-WhiteHouseSouthFacadeஅமெரிக்க அதிபரின் உத்தியோகபூர்வ முதன்மை அலுவலகத்தின் 17-வதுபென்சில்வேனியா அவென்யூ அருகே, உள்ளூர் நேரப்படி இன்று மதியம் 2 அளவில் ஒரு நபர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில் ஒருவர்  படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படு வருகிறது. இந்த துப்பாகி சூடு நடத்தியது யார் என்பதும்,  சம்பவத்திற்கான காரணம் என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைப்பெற்று வருவதாக வாஷிங்டன் போலீஸ் தெரிவித்துள்ளார். 

 

துப்பாகி சூடு நடைப்பெற்ற போது அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply