அனர்த்தத்தில் வீட்டை இழந்தவர்களுக்கு வீடு பாராளுமன்றில் : சஜித்

sajithகாலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட திடீர் அனர்த்தத்தில் வீடுகளை இழந்துள்ள சகலருக்கும் தராதரம் பாராமல் அந்த வீடுகளை மீண்டும் கட்டிக்கொள்வதற்கான உதவித் தொகை வழங்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மண்சரிவிற்குட்பட்டவர்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்பட்டு வீடொன்றைக் கட்டிக் கொள்வதற்கான முழுமையான சக்தியை வழங்குவோம். யாருக்கும் வேறுபாடு காட்டப்பட மாட்டாது. யாருடைய உதவியையும் துண்டித்து விடவும் மாட்டோம் எனவும் விசேட அறிவித்தலொன்றை விடுத்து பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply