இயற்கை அனர்த்தங்கள் நேற்று மாலை வரையுள்ள சேத விபரங்கள்

anarthamநாட்டின் 22 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள காலநிலை மாற்றத்தினால் நேற்று மாலை வரையில் 64 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 134 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.இவ்வசாதாரண காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு என்பவற்றில் இதுவரை 29 பேர் காயமடைந்துள்ளனர்.ஒரு லட்சத்துக்கு 3 ஆயிரத்து 576 குடும்பங்கள் தேசிய ரீதியில் இந்த அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டுள்ளன. 4 லட்சத்து 25 ஆயிரத்து 606 தனிநபர்கள் இக்குடும்பங்களிலுள்ளதாக முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

இவர்களில், 64 ஆயிரத்து 379 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 19 ஆயிரத்து 195 பேர் தங்களது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் இருக்கின்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் 597 பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அனர்த்தங்களில் 354 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3 ஆயிரத்து 326 வீடுகள் சிறிய சேதங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply