டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் மோடி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லிடெல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ.யின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 12.30 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர், ‘பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரின் வீடுகளை தகர்ப்பதற்காக அங்கு வெடிகுண்டு வைத்திருக்கிறேன்’ என கூறி விட்டு அழைப்பை உடனடியாக துண்டித்து விட்டார்.
இதையடுத்து டெல்லி எண்.7, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டுக்கும், டெல்லி சிவில்லைன்ஸ் பிளாக் ஸ்டாப் ரோட்டில் உள்ள முதல்–மந்திரி கெஜ்ரிவால் வீட்டுக்கும் பல்வேறு போலீஸ் படையினரும், வெடிகுண்டு செயலிழப்பு படையினரும் விரைந்தனர்.அங்கு அவர்கள் அங்குலம், அங்குலமாக தேடுதல் வேட்டை நடத்தியும் வெடிகுண்டுகளோ, இதர வெடிபொருட்களோ சிக்கவில்லை. எனவே தொலைபேசியில் விடுக்கப்பட்ட மிரட்டல், ஏமாற்று வேலை என தெரிய வந்தது.வி.ஓ.ஐ.பி. என்னும் இணையவழி தொலைபேசி அழைப்பு மூலம் பேசி, மிரட்டல் விடுத்த நபர் யார் என்று கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply