விளையாட்டாக தந்தையின் துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட 5-வது சிறுமி பரிதாப மரணம்
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் ஹாலே மூர் என்ற சிறுமி தனது தந்தையின் வீட்டில் சகோதரி மற்றும் சகோதரனுடன் வார விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தார். சகோதர, சகோதரிகள் அனைவரும் வெளியே படத்திற்கு சென்றுவிட ஹாலே மட்டும் தந்தையுடன் வீட்டில் இருந்தார். பின்னர் ஹாலே தனது தந்தையின் துப்பாக்கியை எப்படியோ எடுத்துக் கொண்டு விளையாடினாள். அப்போது திடீரென சிறுமி தன்னைத் தானே எதிர்பாராத விதமாக துப்பாக்கியால் சுட்டுக் கொணடாள். துப்பாக்கிச் சத்தம் கேட்டதும் குளித்துக் கொண்டிருந்த தந்தை அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
ஆனால் அந்த சிறுமி துப்பாக்கி குண்டு பட்டு பரிதபமாக உயிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தன் குழந்தை எதிர்பாராதவிதமாக தன்னுடைய துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாக தந்தை தெரிவித்தார். இடது மார்பின் மீது குண்டு பாய்ந்து இடது கையின் மீது வந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply