ஆஸ்திரியாவில் இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் பலி

austriya policeஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் நென்சிங் என்ற நகரத்தில் நேற்று முன்தினம் இரவு திறந்தவெளி அரங்கில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்தது. விடிய விடிய நடந்த இசை நிகழ்ச்சியில் ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை துப்பாக்கியுடன் அங்கு நுழைந்த ஒரு வாலிபர், இசை நிகழ்ச்சியை ஆர்வமுடன் ரசித்துக்கொண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி இலக்கின்றி சரமாரியாக சுட தொடங்கினார்.

இதனால் இசை ஆர்வலர்கள் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இருப்பினும் குண்டுபாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக அந்த நகர போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபருக்கும், அவரது காதலிக்கும் அருகில் உள்ள ஒரு வாகன நிறுத்துமிடத்தில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது காரில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து இசை நிகழ்ச்சியில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார்” என குறிப்பிட்டார். ஆனால் இந்த சம்பவத்தில் அவரது காதலி காயமின்றி தப்பினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply