காலை சிற்றுண்டி, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, தாலிக்கு 8 கிராம் தங்கம், உள்பட 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்ட முதல்வர் ஜெயலலிதா
பதவி ஏற்பு விழா முடிந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமைச்செயலகத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு தலைமைச் செயலக ஊழியர்கள், பணியாளர்கள் வரவேற்பு அளித்தனர்.பிறகு முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது அறைக்கு சென்றார். இரண்டரை மாதங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இன்று தனது முதல்வர் பணியைத் தொடர்ந்தார். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான கோப்புகளில் அவர் கையெழுத்திட்டார்.
1ம் வகுப்பில் இருந்து 5ம் வகுப்பு வரை படிக்கும் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தில் முதல் அமைச்சர் முதல் கையெழுத்திட்டு உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்து கையெழுத்திட்டு உள்ளார். தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிக்கு பதில் மதியம் 12 மணிக்கு திறக்கப்படும். முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் 100 யூனிட் மின்சாரம் இலவசம் திட்டத்திலும் கையெழுத்திட்டார்.விசைத்தறிக்கு 750 யூனிட் மின்சாரம் வரை கட்டணம் கிடையாது திட்டத்தில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து 28 அமைச்சர்களும் தங்களது அறைக்கு சென்று பொறுப் பேற்றனர். இன்றே அவர்களும் பணிகளைத் தொடங்கினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply