புலிகளின் கடல் நடமாட்டம் முடக்கம்; 5 இந்திய போர் கப்பல்கள் ரோந்து; ஹெலிகாப்டர்களும் கண்காணிப்பு
இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே சண்டை தீவிரம் அடைந்து வருகிறது. இலங்கை ராணுவத்தினர் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி பகுதியை சுற்றி வளைத்து கைப்பற்றும் நோக்கத்தில் வான்வழியாகவும், தரை வழியாகவும் அதிரடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து போரில் காயம் அடையும் புலிகள் ராமேசுவரத்துக்கு அகதிகள் போர்வையில் ஊடுருவலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் ராமேசுவரத்தில் இருந்து சுமார் 75 கிலோ மீட்டர் தொலைவில் இலங்கை ராணுவத்திற்கும், புலிகளுக்கும் துப்பாக்கி சண்டை நடந்து வருவதால் தமிழக மீனவர் எல்லை தாண்டி செல்லாமல் இருக்க இந்திய கடல் எல்லை, கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக ராமேசுவரம், தனுஷ்கோடி, மண்டபம், தூத்துக்குடி, நாகப்பட்டிணம் கடல் பகுதிகளில் 5 போர் கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதில் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான விக்ரம் போர்கப்பல் இந்திய கடல் எல்லை பகுதியிலும், ராமேசுவரம் கடல் பகுதியிலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான டி.59 போர் கப்பலும், மன்னார் வளைகுடாகடல் பகுதியிலும், தூத்துக்குடியில் உள்ள இந்திய கடலோர காவல் படை அருணா ஆசப் அலிகப்பலும், மண்டபம்- நாகப்பட்டிணம் கடல் பகுதியில் மற்றொரு போர்க்கப்பலான ரமாதேவி என்ற போர் கப்பலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த போர்கப்பல்களில் 500-க்கும் மேற்பட்ட கடற்படை, கடலோர காவல்படை வீரர்கள் துப்பாக்கியுடன் ரேடார் கருவி மூலம் கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகுகளில் சோதனையிட்டு அவர்களின் அடையாள அட்டையை சரி பார்த்தனர். மேலும் விக்ரம் போர் கப்பலுடன் ஹெலிகாப்டர் ஒன்றும், இந்திய கடற் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்றும் கடலில் தாழ்வாக பறந்து ரோந்து சுற்றி வருகிறது.
இது தவிர மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு சொந்த மான தரையிலும் தண்ணீ ரிலும் அதிவேகமாக செல்லக் கூடிய ஹோவர்கிராப்ட் கப்பலும், ஐ.சி.109 ரோந்து கப்பலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. ராமேசுவரம், தனுஷ் கோடி, அரியமான் கடலோர பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள், புதியவர்களை பிடித்து போலீசார் நேற்று விசா ரணை மேற்கொண்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply