மெல்போர்னில் இருந்து லண்டன் சென்றுவர ரூ.53 லட்சம்: நட்சத்திர ஓட்டலுக்கு இணையான சொகுசு விமானம் தயார்
நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கும் சொகுசுடன் உலகிலேயே விலை உயர்ந்த விமானப் பயணத்தை எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பயணம் செய்ய ஒரு டிக்கெட்டின் விலை சுமார் 53 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அபுதாபியை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் எத்திஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து மெல்போர்ன் சென்றுவர ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னுக்கு புதிய ஏர்பஸ் ஏ380 ரக சொகுசு விமானச் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த விமானத்தில் ‘தி ரெஸிடென்ஸ்’ (இல்லம்) என்ற சிறப்பு பிரிவின்கீழ் தனியாக டிக்கெட்கள் விற்கப்படுகிறது. 75 ஆயிரம் டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 53 லட்சம் ரூபாய்) மதிப்பிலான கட்டணத்தை செலுத்தி இந்த டிக்கெட்டில் பயணம் செய்பவர்களுக்கு 3 அதிசொகுசு அறைகளுடன் 5 நட்சத்திர ஓட்டலில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் வழங்கப்படுகிறது. 125 சதுரஅடி அளவில் சிங்கிள் மற்றும் டபுள் பெட் வசதியுடன் அறைகள் ஒதுக்கப்படுகின்றன. விமானத்தில் விலை உயர்ந்த உணவுகளை சமைப்பதற்காக சிறப்பாக பயிற்சியளிக்கப்பட்ட சமையல் கலைஞரும் பயணம் முழுவதும் இருப்பார்.
இதுதவிர, இந்த விலையுயர்ந்த டிக்கெட்டில் பயணம் செய்யும் விருந்தினரை உற்சாகப்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அதாவது, அதிநவீன பாத்ரும், 32-இன்ச் பிளாட் எல்.சி.டி. டிவி, இரண்டாக மடிக்கும் வகையிலான டைனிங் டேபிள்கள், தோலினால் உருவாக்கப்பட்ட டபுள் சோபா ஆகியவையும் சொகுசு அறைகளில் இடம்பெறுகின்றன.
இவ்வகையில், லண்டனில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கிய எத்திஹாட் சொகுசு விமானம் கடந்த வியாழக்கிழமை மெல்போர்ன் நகரில் தரை இறங்கியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply