விடுதலைப் புலிகள் மீீதான தடையை நீடித்தது அமெரிக்கா!
தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு செயற்பட்டு வந்ததாகவும், இதனால் விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீடிப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தொடர்புகள் மற்றும் புலம்பெயர் தமிழா்களைப் பயன்படுத்தி வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா போன்ற நாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்ததுடன், நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் ஊடாகவும் நிதி கொடுக்கல் வாங்கல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன் பின்னர் இலங்கையில் எந்தவொரு இடத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தாக்குதல்கள் இடம்பெறவில்லை. எனினும், 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலர் 2014ம் ஆண்டு இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்கள். ஏனைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் 2015ம் ஆண்டு மலேசியாவில் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள தலைதூக்கிவிடக் கூடும் என்ற அச்சத்தினால் இலங்கை அரசாங்கம் வடக்கில் கடுமையான இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்தது. தமிழ் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சித்து வருகிறது. தமிழீழ விடுதலைப்புலிகள் மீள தலைதூக்கக் கூடும் என்ற இலங்கை பாதுகாப்பு தரப்பின் அச்சமும் அது தொடர்பான கண்காணிப்புக்களினாலும் ஐ.எஸ் போன்ற ஏனைய ஆபத்துக்கள் குறித்த கண்கணிப்புக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு கொள்கைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்றினாலும் 2015ம் ஆண்டில் அமெரிக்காவுடன் 100 வீத பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply