முதல் நாள் பயணத்தில் கத்தார் பிரதமருடன் நரேந்திர மோடி சந்திப்பு
6 நாள் பயணமாக 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி பயணத்தின் முதல் நாளான நேற்று ஆப்கானிஸ்தான் சென்றடைந்தார். அங்கு இந்தியா சார்பில் கட்டி முடிக்கப்பட்ட ஹெராத் மாகாணத்தில் ஈரான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் உள்ள சிஸ்ட்- இ- ஷரிப் என்ற இடத்தில் உள்ள சல்மா அணையை திறந்து வைத்தார். ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி கத்தார் நாட்டிற்கு சென்றார். அங்கு தொஹா நகரில் இந்திய தொழிலாளர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் இந்திய தொழிலாளர்களுடன் உணவை பகிர்ந்து கொண்ட மோடி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து தனது முதல் நாள் பயணத்தின் முடிவில் பிரதமர் நரேந்திர மோடி கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு நல்லுறவு குறித்து பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தனது பயணத்தில் இரண்டாம் நாளான இன்று கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமது அல்-தானியை இன்று மோடி சந்திக்க உள்ளார்.
அப்போது, கத்தார் நாட்டின் தொழிலபதிகள் மத்தியில் மோடி உரையாற்றுகிறார். இந்தியாவிற்கு அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்வது கத்தார் தொழிலதிபர்கள் தான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply