பணியில் இருந்தாலும் , இல்லாவிட்டாலும் 2500 டாலர்கள் : சுவிஸ் திட்டம்

நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை அறிமுகம் செய்திட, முதல் முறையாக நடத்தப்படவுள்ள நாடு தழுவிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சுவிட்சர்லாந்து swissவாக்களிக்கவுள்ளது.சுவிஸ் நாட்டில் சட்ட ரீதியாக வாழ்வுரிமை பெற்ற வயது வந்தோர் அனைவருக்கும், அவர்கள் பணியில் இருந்தாலும், இல்லா விட்டாலும் , மாத வருமானமாக 2500 டாலர்களை வழங்கிட இந்த அடிப்படை வருமான திட்டம் அழைப்பு விடுக்கிறது.வறுமையை எதிர்த்து போராடவும், மக்கள் தங்களின் வாழ்க்கை முறை மற்றும் பணி ஆகியவை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை தேர்தெடுக்கவும் இத் திட்டம் உதவும் என்று இந்த திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மக்களின் பணி புரியும் ஊக்கத்தையே இத்திட்டம் கெடுத்து விடும் என்று சுவிஸ் நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் இத்திட்ட எதிர்ப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

உலகில் சுவிட்சர்லாந்து மட்டுமே அடிப்படை வருமான திட்டத்தை அறிமுகம் செய்தால், பொருளாதார ரீதியாக புலம் பெயர்பவர்கள் சுவிஸ் நாட்டுக்கு மடை திறந்த வெள்ளமாக நுழைவதற்கு வழிவகை செய்துவிடும் என்று நாட்டின் வலது சாரி அரசியல்வாதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply