கச்சத்தீவை மீட்க ஜெயாலலிதா நடவடிக்கை எடுப்பார் என ஸ்டாலின் நம்பிக்கை
கச்சத்தீவை மீட்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று, தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அவர் அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.தமிழக சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைப் பெற்றுள்ள திமுக, பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அவரை பேரவை திமுக கட்சித் தலைவராக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் தேர்வு செய்தனர்.
பேரவையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியாக திமுக விளங்குவதால், அந்தக் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை பேரவைத் தலைவர் பி.தனபால் அங்கீகாரம் செய்துள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சனிக்கிழமை அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு அடுத்த நிலையில் வருகிறார். அரசு கொறடாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அந்தச் சலுகைகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply