பிரதமர் மோடியின் வருகையால் இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்படும்: அமெரிக்கா கருத்து

obamaபிரதமர் நரேந்திர மோடி தனது 5 நாடுகள் சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக நாளை (7-ந் தேதி) அமெரிக்காவுக்கு செல்கிறார். 2 modiநாட்கள் அங்கு இருக்கும் அவர், வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை சந்தித்து இரு தரப்பு உறவினை மேம்படுத்தும் வகையில் பேச்சு நடத்துகிறார். இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “பிரதமர் மோடியின் வருகையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஓவல் அலுவலகத்தில் ஜனாதிபதி ஒபாமாவுக்கும், பிரதமர் மோடிக்கும் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடக்கிறது. வெள்ளை மாளிகையில் விருந்தும் நடக்கிறது” என கூறினார்.

 

மேலும் அவர் கூறும்போது, “பிரதமர் மோடியின் வருகையின்போது, இந்தியா, அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு, ராஜ்ய ரீதியலான ஒத்துழைப்பை மேம்படுத்த கவனம் செலுத்தப்படும். பருவ நிலை மாற்றம், தூய்மையான எரிசக்தி பற்றியும் பேசப்படும். இரு நாடுகளின் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க பொருளாதார வளர்ச்சி குறித்தும் விவாதிக்கப்படும்” என குறிப்பிட்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply