இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து எமக்கு உறுதியான நம்பிக்கை : அமெரிக்கத் தளபதி
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கப் படைகள் அண்மைக்காலமாகப் பெற்றுவரும் வெற்றிகளை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கூட்டுத் தலைமைத் தளபதி அட்மிரல் திமோதி கீற்றிங் பாராட்டியுள்ளார்.
புலிகள் முன்பிருந்ததைவிட மிகவும் முக்கியத்துவம் குறைந்த ஒரு தரப்பாகி வருகின்றனர் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஹவாய் பகுதியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் பிராந்திய கூட்டுப்படைத் தளபதியான கீற்றிங், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து முதல் சீனா, தாய்வான், ஜப்பான், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவராக உள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிடும் இலங்கைக் கடற்படையின் திறன்கள் அதிகரித்து வருவது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம் என்று மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,
இலங்கை இராணுவத்தின் முன்னேற்றம் குறித்து எமக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டிருப்பதுடன், அது குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். செய்வதற்கு பல பணிகள் உள்ளன என்பதை இலங்கை இராணுவமே முதன் முதலில் ஏற்றுக்கொண்டது என நான் நினைக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் தனது முயற்சியில் வெற்றியடைவதற்கு இலங்கை இராணுவத்துக்கு மேலும் பலமும், இயல்தகைமையும் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகிலேயே (விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான) சிறந்ததொரு நோக்கத்தை இலங்கை இராணுவம் கொண்டிருக்கிறது என்பதில் எமக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. எனவே, நிச்சயமாக அவர்களுக்கு மேலும் பலமும், இயல்தகைமையும் தேவைப்படும். ஆனாலும், அவர்களுடைய இப்போதைய முன்னேற்றம் பாராட்டத்தக்கது. என்று அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கூட்டுத் தலைமைத் தளபதி அட்மிரல் திமோதி கீற்றிங் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply