வங்காளதேசத்தில் இந்து ஆசிரம பணியாளர் கழுத்தை அறுத்து படுகொலை
வங்காளதேசத்தில் உள்ள பாப்னா மாவட்டம், ஹேமாயத்பூர் பகுதியில் தாக்கூர் அனுகுல் சந்திரா சத்சங்க பரம்தீர்த்த ஹேமாயத்புர்தாம் என்ற இந்து ஆசிரமம் ஒன்றுள்ளது. இந்த ஆசிரமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தன்னார்வலராக பணியாற்றி வந்தவர் நித்யாரஞ்சன் பாண்டே(60).ஆசிரமத்தின் அருகே இன்று காலை நித்யாரஞ்சன் பாண்டே வழக்கமான நடைபயிற்சி சென்றபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பியோடியது.
வங்காளதேசத்தில் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்கள்மீது சமீபகாலமாக கொலைவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இருநாட்களுக்கு முன்பு மேற்கு ஜினாய்கா மாவட்டத்தில் கோபால் கங்குலி(70) இந்து கோயில் பூசாரி ஒருவர் கழுத்தை அறுத்து துடிதுடிக்க படுகொலை செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
இதற்கு முன்னர் நிகழ்ந்த இதுபோன்ற படுகொலைகளுக்கு இங்குள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளும், இந்திய தீபகற்பத்தில் உள்ள அல்-கொய்தா இயக்கத்தினரும் அவர்களின் ஆதரவாளர்களும் பொறுப்பேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற இந்த படுகொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply