பாராளுமன்ற செயலருக்கு எதிரான பிரேரணை நிராகரிப்பு

sabanakkarபாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டுள்ளது. செயலாளர் நாயகத்துக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் எதுவித அடிப்படையும் அற்றது என பாராளுமன்ற விவகாரம் குறித்த தெரிவுக்குழு அடையாளம் கண்டிருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

 

நேற்று முற்பகல் 10.30 மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போது இது பற்றித் தெரிவித்தார்.

 

குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது சபாபீடத்தில் இருந்த உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற செயலாளர் நாயகமோ பக்காச்சார்பான முறையில் நடந்துகொண்டமை குறித்து சந்தேகம் இல்லையென்றும், இந்த விவகாரம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தன்னிடம் அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply