ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மறுத்த 5 ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.600 கோடி அபராதம்: டெல்லி அரசு அதிரடி
டெல்லி அரசின் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளை அமைக்க முடிவு செய்த சில நிறுவனங்கள் அதற்காக சலுகை விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தருமாறு கடந்த 1960௧990-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் டெல்லி அரசிடம் மனு செய்திருந்தன. வருமானத்தில் பின்தங்கிய நிலையில் ஏழை மக்களுக்கு உள்நோயாளிகள் எண்ணிக்கையில் 10 சதவீதம் அளவுக்கும், வெளிநோயாளிகள் எண்ணிக்கையில் 25 சதவீதம் அளவுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்கான இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மேற்கண்ட 43 தனியார் நிறுவனங்களுக்கு டெல்லி அரசு சலுகை விலையில் நிலம் ஒதுக்கீடு செய்து தந்தது.
ஆனால், சலுகை விலையில் நிலத்தை பெற்ற சில தனியார் மருத்துவமனைகள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாமல் ஏழை மக்களுக்கான இலவச சிகிச்சை ஒதுக்கீட்டை சரியான முறையில் பின்பற்றவில்லை என டெல்லியில் உள்ள ஐந்து பிரபல மருத்துவமனைகளின்மீது தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதுதொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி மேற்கண்ட மருத்துவமனைகளுக்கு டெல்லி அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், அந்த கடிதங்களுக்கு திருப்திகரமான பதில் அளிக்க மேற்கண்ட மருத்துவமனைகள் தவறிவிட்டதால் சலுகை விலையில் அளித்த நிலங்களின் சந்தை விலை மதிப்புக்கு இணையான தொகையை அபராதத்துடன் திருப்பி செலுத்துமாறு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூடுதல் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள போர்ட்டிஸ் ஹெல்த்கேர், தேவகி தேவி பவுண்டேஷன், தர்மஷிலா புற்றுநோய் மருத்துவமனை உள்ளிட்ட 5 மருத்துவமனைகளும் வரும் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதிக்குள் டெல்லி அரசுக்கு 600 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், போர்ட்டிஸ் ஹெல்த்கேர் குழுமத்தை சேர்ந்த எஸ்கார்ட் ஹார்ட் இன்ஸ்டிடியூட் என்ற மருத்துவமனை மட்டும் 503.36 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடருவோம் என சில மருத்துவமனைகளின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply