புலோரிடா இரவு விடுதி சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கை: ஒபாமா
அமெரிக்காவின் புலோரிடா மாகாணத்தில் ஒர்லண்டோ நகரிலுள்ள இரவு விடுதியொன்றில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக இருக்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர் தற்பொழுது இனம்காணப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து புலோரிடா முழுவதும் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply