ஓர்லாண்டோ துப்பாக்கிதாரி இஸ்லாமிய அரசுக்கு விசுவாசமானவர்: எப்.பி.ஐ
ஓர்லாண்டோவில் உள்ள ஒரு பாலுறவுக்காரர்களுக்கான இரவு கேளிக்கையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி, ஐம்பது பேரை கொன்ற நபர் , இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு விசுவாசம் செய்து கொண்டவர் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு துறை கூறுகிறது. அந்த நபர் அமெரிக்க குடிமகன் என்றும் அவரின் பெயர் ஒமர் மாடின் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
பல உயிர்களை பலிவாங்கிய இந்நிகழ்வு, அமெரிக்க வரலாற்றின் மிக கொடிய துப்பாக்கிச் சூடாக கருதப்படுகிறது. ஒமார் மாடின் , 2013ம் ஆண்டில், தனக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறியதாக வந்த செய்திகளை அடுத்தும், அவர் தெரிவித்த சில வன்முறையைத் தூண்டக்கூடிய கருத்துக்காலை அடுத்தும்தான், அவரைப் பற்றி தங்களுக்குத் தெரிய வந்ததாக எப்.பி.ஐ ஒப்புக்கொண்டிருக்கிறது.
அந்த வழக்கில் மார்டின் முழுவதுமாக விசாரிக்கப்பட்டார் எனவும் பின் அந்த வழக்கு கைவிடப்பட்டது எனவும் மத்திய புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.
மார்டினின் முன்னாள் மனைவி, சிடோரா யுசுஃபி, மார்டின் ஒரு உறுதியற்ற மனநிலையை கொண்டவர், வன்முறையாளர் ஆனால் அவர் மத தீவிரவாதி அல்ல என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply