பிரதமர் – முதல்வர் இன்று சந்திப்பு
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா தில்லியில் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசுகிறார்.சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன், தமிழக முதல்வராக ஜெயலலிதா 6-ஆவது முறையாக மே 23-இல் பதவியேற்றார். அப்போது, அவருக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பலர் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக் கூறினர்.சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
இன்று சந்திப்பு: இந்த நிலையில், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காக சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு செல்கிறார். தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்துக்குச் செல்லும் முதல்வர், மாலை 4.30 மணிக்கு பிரதமரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.
அப்போது, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு ஆதரவு தரக் கோரி கோரிக்கை மனுவை முதல்வர் அளிப்பார் என்றும் காவிரி, மீனவர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளைத் தீர்க்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்த உள்ளார் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்புக்குப் பின்னர் மாலையே ஜெயலலிதா சென்னைக்கு திரும்ப உள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், முதல்வரின் தனிச் செயலர்களும் செல்ல உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply