பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் ஜெயலலிதா சந்திப்பு: தமிழக திட்டங்கள் குறித்த கோரிக்கை மனு அளித்தார்
தமிழக சட்டசபைக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து 6-வது முறையாக முதல்-அமைச்சர் பொறுப்பை ஜெயலலிதா ஏற்றார்.மாநிலத்தில் முதல்-மந்திரியாக பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து தங்கள் மாநிலத்துக்கு தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் பற்றி பேசுவது மரபாக உள்ளது.அந்த வகையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லிக்கு புறப்பட்டார். போயஸ்கார்டன் இல்லத்தில் இருந்து காலை 10.35 மணிக்கு புறப்பட்ட அவர் 11 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ், நிதித் துறை செயலாளர் சண்முகம் ஆகியோரும் சென்றுள்ளனர்.
டெல்லி சென்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து தமிழ்நாடு இல்லத்துக்கு சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா தமிழ்நாடு இல்லத்தில் சிறிது நேரம் தங்கி இருந்தார்.
பின்னர் மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பி.ராமமோகனராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply