மலேசிய தூதர் பதவிக்கு இந்திய வம்சாவளி பெண்ணை நியமித்து ஒபாமா உத்தரவு
இந்தியாவின் மும்பை நகரில் பிறந்த நூர் லக்டிர் என்பவர் 1920-ம் ஆண்டுவாக்கில் அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு குடியுரிமை பெற்று நியூயார்க் நகரில் வாழ்ந்து வந்தார். இவரது மகளான கமலா ஷிரின் லக்டிர், அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் கல்லூரி மற்றும் தேசியப் போர் கல்லூரி ஆகியவற்றில் படித்து, பின்னர் வெளியுறவுத்துறை சார்ந்த படிப்பையும் 1991-ம் ஆண்டு முடித்தார். 1991 முதல் 2000-ம் ஆண்டுவரை வெளியுறவுத்துறை அலுவலகங்களில் பல்வேறு பணிகளில் திறம்பட செயலாற்றினார்.
இந்தோனேசியா மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றிய இவர், 2001-2005 வரை சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அலுவலராகவும், 2009-2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பெல்பாஸ்ட் வடக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்தில் அமெரிக்க தூதராகவும் பணியாற்றியுள்ளார்.
2011 முதல் 2015 வரை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரசியல் விவகாரங்கள் பிரிவு செயலாளருக்கு செயல் உதவியாளராகவும் பணியாற்றிய அனுபவம்வாய்ந்த கமலா ஷிரின் லக்டிர்-ஐ மலேசியா நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமித்து அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவுக்கு அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்த பின்னர் தற்போதைய மலேசிய தூதர் ஜோசப் யுன் வகித்து வரும் பதவியை கமலா ஷிரின் லக்டிர் விரைவில் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply