விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஒரு தொகை ஆயுதங்கள் மன்னாரில் மீட்பு
மன்னார், பாலம்பிட்டி பிரதேசத்தில் யுத்த காலத்தின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு தொகை ஆயுதங்களை வன்னி விமானப்படை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.விமானப் படையினரின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய இந்த ஆயுதங்களை மீட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நிலக்கண்ணி வெடிகள் 74, மோட்டார் குண்டுகள் 6, சிறியளவிலான கைக்குண்டுகள் 3 உள்ளிட்ட ஆயுதங்கள் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பதுங்குக்குழி ஒன்றிலிருந்தே இவற்றை மீட்டதாகவும், தற்போது குறித்த பிரதேசம் பற்றைக்காடாக காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த ஆயுதங்களை மீட்பதற்கு மன்னார் நீதிவானிடம் அனுமதி பெறப்பட்டதாகவும், ஆயுதங்களை மீட்கும் போது மன்னார் மாவட்ட நீதிபதியும், பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதும் அவற்றை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, பொலிஸார் குறித்த ஆயுதங்கள் தொடர்பில் பூரண அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply