அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது-பசில் ராஜபக்ஷ
ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் விவசாயிகள்,தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் என அனைத்து தரப்பினரையும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒன்று என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியால் வரவு செலவுத்திட்டம் சமர்பிக்கப்பட்டதையடுத்து பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அனைத்து துறைகளுக்கும் வழங்கக்கூடிய இயலுமான அளவு நிவாரணம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளதாகவும் இதில் முன்வைக்கப்பட்ட”வடக்கின் வசந்தம்” திட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் மீதான ஜனாதிபதியின் சகோதரத்துவ உணர்வு புலனாகிறது என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
வெளிநாட்டு உதவிகளை நாடாமல் சுய முயற்சியின் மூலம் நாட்டைக் கட்டி எழுப்பக்கூடிய ஒரு வரவு செலவுத் திட்டமாக இது அமைந்துள்ளதெனவும் அவர் மெலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply