தேசிய பாதுகாப்பு தொடர்பிலேயே பொது மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது

poojithaவடக்கு நிலவரங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தே பொது மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.யாழிற்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் சந்தித்து கலந்துரையாடினார்.நேற்று மாலை 6.00 மணிவரை இவ்வாறு கலந்துரையாடியதுடன், பொலிஸாரின் குறைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்தும் ஆராய்ந்துள்ளார்.

சந்திப்பின் நிறைவில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்தில் கடமையாற்றும் பொலிஸாரின் சகல குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளேன்.

இவ்வாறான சந்திப்புக்களை சிவில் அமைப்புக்களுடனும் மேற்கொள்ளவுள்ளேன். இந்த சந்திப்புக்களில் சிவில் சமூக அமைப்புக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பம் பொலிஸ் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும்.

இவ்வாறு மத்திய மாகாணத்தில் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்கள் நடாத்தி, அவர்களிடம் எடுத்துக்கொள்ளப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்களின் ஊடாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த நடவடிக்கைகள் மத்திய மாகாணத்தில் வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதேநேரம், பொலிஸாரின் குறைநிறைகளைக் கேட்டறிந்துகொண்டதுடன், பதில் வழங்கக் கூடியவற்றிற்கு பதில் வழங்கப்பட்டுள்ளதுடன், தீர்க்க முடியாத பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

பொலிஸாரின் சேவைகள் திருப்தி அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதேநேரம், நலன்புரி விடயங்களை தேடியறிந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவற்றினை வழங்குவதன் ஊடாக சிறந்த மதிப்புமிக்க மற்றும் பொதுமக்களுடான நல்லுறவை பேணக்கூடிய சிறந்த பொலிஸ் சேவை வழங்க முடியுமென எதிர்பார்க்கின்றேன்.

அண்மைக்காலங்களில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாகவும் அறிவதற்கு மக்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இவ்வாறான நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் போது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்களுடனும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் மேலும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply