வங்காளதேசத்தில் இந்து ஆசிரியரை தாக்கியவர் துப்பாக்கி சண்டையில் உயிரிழப்பு

banga policeவங்காளதேசத்தின் மதாரிபூரில் உள்ள அரசு பல்கலைக்கழக கல்லூரியில் கணித விரிவுரையாளராக வேலை பார்க்கும் ரிபான் சக்கரவர்த்தி கடந்த புதன்கிழமை தனது வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள், தாக்குதல் நடத்தியவர்களில் குலாம் பைஜல்லாஹா பாகிம் (வயது 19) என்பவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மற்ற 2 பேர் தப்பிச் சென்று விட்டனர்.

கைது செய்யப்பட்ட பாகிம் தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதியாக இருக்கலாம் என சந்தேக்கிகப்படுகிறது. அவனிடம் விசாரணை நடத்திய போலீசார், அவனது கூட்டாளிகள் இருவரையும் அடையாளம் காட்டுவதற்காக அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிலர் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் பாகிம் உடலில் குண்டுபாய்ந்து உயிரிழந்தான்.

வங்காளதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதேபோல் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினரின் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்து இதுவரையில் மதச்சார்பற்ற வலைத்தள எழுத்தாளர்கள், ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள், வெளிநாட்டு உதவிப் பணியாளர்கள், சிறுபான்மை முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தைச் சேர்ந்தவர்கள் என 30க்கும் மேற்பட்டோரை தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply