தத்தளிக்கும் தமிழர்களுக்கு கருணை காட்டுங்கள்: விடோடோக்கு டக்ளஸ் கடிதம்

daclasஇந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் கடலில் தத்தளிக்கும் தமிழ் மக்களின் அவலங்கள் சொல்லில் அடங்காதவையாகும். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் கூடுதாக இருக்கின்றார்கள் என்பதனால், அவர்களின் நிலைமையை கவனத்திலெடுத்து மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை வழங்க இந்தோனேசியா அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அக்கடிதத்தை கொழும்பிலுள்ள இந்தோனேசிய தூதுவராலத்தில் அவர் கையளித்துள்ளார். அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்வது ஆபத்தானது என்றும், அப்படி செல்கின்றவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் அகதிகளாக ஏற்றுக் கொள்ளாது என்றபோதும், ஆட்கடத்திலில் ஈடுபடுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி எமது மக்கள் தமது பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் விற்றும், பெருந்தொகையான கடன்களை வாங்கியும் ஆபத்தான கடல்வழிப் பயணத்துக்கு தயாராகின்றார்கள்.

எனவே, படகில் பயணம் செய்து கடலில் பல ஆபத்துக்களை சந்தித்து இந்தோனேசிய கடற்பரப்பை அடைந்திருக்கின்றார்கள். இப்படியாக ஆபத்தான கடற்பயணத்தை செய்தவர்களில் பல ஆயிரம்பேர் கடலிலேயே பலியாகிப் போயிருக்கின்றார்கள். பலர் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்து முகாம்களில் அகதிகளாக அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

எனவே, எமது மக்களின் உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளையும், அத்தியாவசிய உதவிகளையும் இந்தோனேசிய அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் குடியகல்வு சட்டங்களை மீறியும் ஆட்களை பொய் வாக்குறுதிகளைக் கூறி அழைத்துவந்த ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராகவும், அதற்குத் துணையாக செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை இந்தோனேசிய அரசாங்கம் எடுக்கவேண்டும். ஆனால் கடலில் தத்தளிக்கும் எமது மக்களின் அவலத்தையும், அழுகையையும் மனிதாபிமான ரீதியாகவே அணுகவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply