தீர்வுக்கான நேரம் நெருங்கி வரும் நிலையில் தமிழர் தரப்பு அதனை குழப்பக்கூடாது: ராஜித

RAJITHAஎதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தை விமர்சிக்கவும், சர்வதேசமட்டத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தவும் சர்வதேச ரீதியில் கருத்துக்களை வௌிப்படுத்தவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு உரிமையுள்ளது என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கருத்துக்களையோ, வடமாகாண முதலமைச்சரின் கருத்துக்களையோ அல்லது புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் கருத்துக்களையோ முழுமையாக நடைமுறைப்படுத்தி தீர்வுகாண வேண்டும் என்ற தேவை இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அனைத்து மக்களின் ஒருமித்த கருத்திற்கு அமையவே அரசாங்கம் இறுதித்தீர்மானம் எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் ஒன்றுகூடி வரும் நிலையில் அதை குழப்பாது தமிழர் தரப்பு பொறுமையாக இருந்து இந்த தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான விவாதம் அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் புலம்பெயர் அமைப்புக்கள் ஐ.நா ஆணையாளர் செய்ட் அல் ஹுசைனை சந்திக்கவுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply