ஜனாதிபதி, வடக்கு முதலமைச்சரை புறக்கணித்தாரா?
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற துரையப்பா விளையாட்டரங்கு திறப்பு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி வடமாகாண முதலமைச்சரை விழிக்காது தனது உரையை ஆரம்பித்திருந்தமை பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே ஒர் சலனத்தையும் ஏற்படுத்தியிருந்ததுடன், ஜனாதிபதி வேண்டுமென்றே இவ்வாறு செயற்பட்டாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.இந்தியாவின் உதவியில் துரையப்பா விளைராட்டரங்கு மீள் நிர்மாணம் செய்யப்பட்டு மீண்டும் அதனை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்ததுடன் செய்மதி மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துகொண்டிருந்தனர்.
அத்துடன், சிறப்பு விருந்தினர்களாக விளையாட்டுதுறை அமைச்சர் இராஜாங்க அமைச்சர் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணம் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த நிகழ்வுக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட கண்ணாடி அறையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் முதலமைச்சர் செல்லும் போது, முதலமைச்சரது பிரத்தியேக மெய்ப்பாதுகாவலர் அவருடன் செல்வதற்கு ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவு அனுமதி வழங்கியிருக்கவில்லை.
இதன் காரணமாக தனது பாதுகாவலர் இன்றி இருக்கைக்கு சென்ற முதலமைச்சர் அங்கிருந்த படியொன்றில் தடுக்கி விழுந்தார்.
இருக்கைகளுக்கு முதலமைச்சரது பாதுகாவலர் அனுமதிக்கப்படாத போதும், நாடாளுமன்ற உறுப்பினர்களது பாதுகாவலர்களும் சகோதரர்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் நிகழ்வில் ஜனாதிபதியும் அவரது பாதுகாப்பு பிரிவும் வேண்டும் என்றே முதலமைச்சரை புறிக்கணித்துள்ளனர் என்றும் அவரை அசிங்கப்படுத்த முயற்சித்துள்ளனர் என்றும் பலராலும் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
அத்துடன், அதனை நியாப்படுத்தும் வகையில் நேற்றைய செயற்பாடு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply