டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுவிடுவார்: ஹிலாரி கிளிண்டன்

hilaryஅமெரிக்காவில் ஒபாமாவின் பதவிக்காலம் முடிய உள்ளதால், அவருக்கு பதிலாக புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்கிறது.இந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரியும் குடியரசு கட்சியின் சார்பில் தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப்பும் மோத உள்ளனர்.இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபரானால் அமெரிக்க பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு கொண்டு சென்றுவிடுவார் என்று ஹிலாரி கிளிண்டன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஹிலாரி பேசியதாவது:-

டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்திற்கு பேராபத்தாக திகழ்வார். டிரம்பின் வரி விதிப்பு திட்டமானது பணக்காரர்களுக்கே பயன் உள்ளதாக இருக்கும்.டொனால்ட் டிரம்ப் தான் அதிபர் பதவிக்கு தகுதியானவர் என்று தொழில் சாதனைகளை வைத்து கூறுகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply