கச்சத்தீவை மீட்க இந்திய அரசு தயங்காது: பொன்.ராதாகிருஷ்ணன்
காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் பா.ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று திருப்பூரில் நடந்தது. அப்போது காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பா.ஜனதா கட்சியில் இணைந்தனர்.நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க. இதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இதற்கு தீர்வு தேடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதற்கு தகுந்த ஒத்துழைப்பை மாநில அரசு கொடுத்து இருந்தால் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.
இது இரு நாடுகளுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாகும். அண்டை நாட்டுடன் உள்ள நட்பு தொடர வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படும் வகையில் இலங்கை அரசின் செயல்பாடு அமைந்தால் கச்சத்தீவை மீட்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு தயங்காது.
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி என்பது முக்கியத்துவம் பெறாது. அந்த பகுதியின் பிரச்சினைகள், வேட்பாளர் மற்றும் கட்சியின் பலமும் சேர்ந்தே வெற்றியை தரும். அப்போதையை சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply