20 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-34
இஸ்ரோவின் தயாரிப்பான பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் மூலம் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்பட 17 வெளிநாட்டு செயற்கைகோள்களும், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 1.5 கிலோ எடை கொண்ட ‘சத்தியபாமா சாட்’, புனே என்ஜினீயரிங் கல்லூரியின் ‘ஸ்லயம்’ மற்றும் ‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள்களும் ஏவ திட்டமிடப்பட்டது. இவற்றில் ஒரு செயற்கைக் கோள் பிரபல ‘கூகுள்’ நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.26 மணிக்கு இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த 48 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று முன்தினம் தொடங்கியது.
பி.எஸ்.எல்.வி. சி-34 நவீன மோட்டார் கருவிகள் பொருத்தப்பட்ட எக்ஸ்.எல். வகையை சார்ந்த 14-வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர்.
இதன்மூலம் செலுத்தப்படவுள்ள செயற்கைக் கோள்களில் முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.
இந்த செயற்கைகோளின் எடை 727.5 கிலோ. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை 9.26 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்த ராக்கெட் நிர்ணயிக்கப்பட்ட பாதையை நோக்கி முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து ராக்கெட்டின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply