சந்தேகப்பட்ட புதைகுழிகளை தோண்ட கோரலாம்: சட்ட மூலத்தில் தெரிவிப்பு

LUXMANகாணாமல் போனதாகக் கூறப்படும் ஆள் ஒருவர், ‘காணாமற்போன ஆளாக’ உள்ளார் அல்லது ‘இறந்துள்ளார்’ என காணாமற் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முடிவு செய்யுமிடத்து ‘இல்லாமைச் சான்றிதழ்’ அல்லது இறப்புச் சான்றிதழை வழங்கலாம் என்றும், சந்தேகிக்கப்பட்ட புதைகுழிகளை தோண்டுவதற்கான அனுமதிக்காக நீதிமன்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் காணாமற்போன ஆட்கள் பற்றியவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்ட மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமற்போன ஆட்கள் பற்றியவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம்நேற்றுப் புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த சட்டமூலத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பிட்டுள்ளது. சட்டமூலத்தைச் சமர்ப்பித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும், காணாமல் போன ஆட்களின் உறவினர்களுக்கு உதவி வழங்குவதற்கும் இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த அலுவலகத்தின் ஊடாக காணாமல் போன ஆட்கள் பற்றிய தரவுத்தளம் நிறுவுவதற்கும், இந்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படுகின்றது’ என்றார். இதனையடுத்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இச்சட்டமூலம் மீதான விவாதம் பிறிதொரு தினத்தில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு ஏதுவான காரணங்களாகச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மிக முக்கியமான விடயங்களில் சில:  காணாமற்போன ஆட்களைத் தேடி கண்டுப்பிடித்தல்   காணாமற் போன ஆட்கள், அவர்களின் உறவினர்களின் உரிமைகள், அக்கறைகளைப் பாதுகாத்தல்   மீளவும் இடம்பெறாமல் இருப்பதற்கு உறுதியளித்தல்   தலைமையலுவலகம், கொழும்பில் அமைந்திருத்தல் வேண்டும். பிராந்திய அலுவலகங்களை ஸ்தாபிக்கலாம்.   அலுவலகத்தில் 7 உறுப்பினர்கள் இருப்பர். மூன்றாண்டு காலப்பகுதிக்கு பதவி வகிப்பர்.   காணாமல் போனதாகக் கூறப்படும் ‘ஆள்’ உயிருடன் இருந்தால் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.  பலிக்கு உட்படுத்தப்பட்டோருக்கான சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்   அடையாளங் காணப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில், எதிர்காலங்களில் காணாமற்போகின்றமையை தடுத்தல்.   கடத்திப் பலிக்கு உட்படுத்தப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள், ஆயுதந்தாங்கிய மோதல்கள், அரசியல் அமைதிக்குலைவு குடியியல் குழப்பங்கள் ஆகியன காணாமற்போன ஆட்கள் பற்றிய சம்பவங்களாக இந்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply