வீட்டுத் திட்டம் இன்னமும் இல்லை புதுக்குடியிருப்பில் ஆர்ப்பாட்டம்!

VIDDUTHTHIDDAMபோர் முடிந்து 7 வருடங்கள் கடந்த விட்ட நிலையிலும், இதுவரையில் தங்களுக்கென வீட்டுத்திட்டம் வழங்கப்படாததைக் கண்டித்து, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு எதிரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு வடக்கு பகுதி மக்களும், பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களும் இதில் பங்கேற்றன.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்ற பிரதேச செயலாளர் பிரணவநாதன் மக்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, எதிர்வரும் 4ஆம் திகதி இந்த பிரச்சினை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply