பங்குச் சந்தையில் பிரெக்ஸிட் தாக்கம் தற்காலிகமானது: நிபுணர்கள் கருத்து
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்வதா விலகுவதா என்பது குறித்த வாக்கெடுப்பு நேற்றுமுதல் நடைபெற்றுவருகிறது. இதனால் உலகெங்கும் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுவருகிறது. அதன் தாக்கம் இந்தியச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. எனினும் இது தற்காலிகமானதென பொருளாதார நிபுணர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.
இன்றைய அளவில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 960 புள்ளிகள் வரைக்கும், நிஃப்டி 300 புள்ளிகள் வரைக்கும் சரிவைச் சந்தித்துள்ளன. எனினும் இந்தச் சூழலை எதிர்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக ரிசர்வ் பேங்க் கூறியுள்ளது. எனினும் இதன் தாக்கம் இந்தியச் சந்தையில் நீண்ட காலம் நீடிக்காதென நம்புவதாக பொருளாதார விவகாரத் துறை செயலாளர் சக்திகந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் இநதியாவின் ஏற்றுமதிச் செயல்பாடுகளின்மேல் இந்த பிரெக்ஸிட் பாதிப்பு பெரிய அளவில் இருக்காதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த பிரெக்ஸிட் தாக்கத்தால் கச்சா எண்ணெய் விலை குறையவும் வாய்ப்பிருக்கிறது. அப்படிக் குறைந்தால் அதன் தொடர்விளைவாக இந்தியப் பொருளாதாரம் ஆதாயமடையும் என சில பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply