முக்கிய கூட்டாளிகளான பிரிட்டன், ஐரோப்பிய யூனியனுடன் ஐ.நா தொடர்ந்து பணியாற்றும்: பான்-கி-மூன்

ban-ki-moonஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன. ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.

 

இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக கூறி வந்த பிரிட்டன் மக்கள், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.

 

இந்த நிலையில், தற்போது நடைபெற்ற பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய இரு கூட்டாளிகளுடன் ஐ.நா. சபை தொடர்ந்து பணியாற்றும் என்று பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் தெரிவித்துள்ளார்.

 

வளர்ச்சி, மனிதநேய நடவடிக்கைகள், அமைதி, பாதுகாப்பு மற்றும் அகதிகள் உள்ளிட்ட விவகாரங்களில் ஐக்கிய நாடுகளுடன் ஐரோப்பியன் யூனியன் தொடர்ந்து நல்ல கூட்டாளியாக செயல்படும் என்றும் கூறியுள்ளார்.

 

அதேபோல் பிரிட்டனும் நல்ல தலைமை பண்புடன் பல்வேறு இடங்களில் செயல்பட வேண்டும். நாம் இணைந்து செயல்படும் போது நாம் வலிமையாக மாறுகிறோம் என்றார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply