அமெரிக்காவில் நூறாண்டு வரலாறு காணாத பெருவெள்ளத்துக்கு 23 பேர் பலி
மலைகள் சூழ்ந்த அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பத்து அங்குலம் அளவிலான கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் ஏற்பட்ட வெள்ளநீர் ஆறுகளின் வழியாக பெருக்கெடுத்து ஓடியதுடன் கரைகடந்து ஊர்களுக்குள்ளும் புகுந்தது. குறிப்பாக, இங்குள்ள எல்க் ஆற்றின் நீர்மட்டம் கடந்த 1888-ம் ஆண்டுக்கு பின்னர் 32 அடியாக உயர்ந்தது. இதனால், மாநிலத்தின் கிரீன்பிரியர் பகுதியில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மூன்று மாதங்கள் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால் வீடுகளுக்குள் சுமார் எட்டு முதல் பத்து அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கியுள்ளதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், வெள்ளம் மற்றும் மழைசார்ந்த விபத்துகளில் சிக்கி 23 பேர் உயிரிழந்ததாக எர்ல் ரே டாம்ப்லின் தெரிவித்துள்ளார். நூறாண்டுகால வரலாறு காணாத வெள்ளப்பெருக்காக இதை குறிப்பிட்டுள்ள அவர், ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply