பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண் சல்மான் கானிடம் நஷ்ட ஈடு கோரி மனு
இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நடிகர் சல்மான் கானிடம் பெருந்தொகையை நஷ்ட ஈடாகக் கோரியுள்ளார்.சமீபத்தில் நடித்த திரைப்படம் ஒன்றில் படப்பிடிப்பின்போது மிகக் கடினமாக உழைத்ததாகவும், உடல் அளவில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் போல் உணர்ந்ததாகவும் பேட்டி ஒன்றில் சல்மான் கான் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று கூறியுள்ள அவர், சல்மானின் கருத்துக்கள் தன்னை பாதித்திருப்பதாக அறிக்கை ஒன்றில் அந்தப் பெண் கூறியுள்ளார்.
சல்மான் கானிடம் இருந்து சுமார் ஒன்றரை மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடாக அந்தப் பெண் கோரியுள்ளார்.
ஏற்கெனவே சல்மான் கானின் அந்தக் கருத்துக்கள் இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.
சல்மான் கானின் திரைப்படப் புகழ் காரணமாக அவருடைய இந்தக் கருத்துக்கள் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply