சுவாதி கொலையில் புதிய ஆதாரம்: கொலையாளியை 4 நாட்களில் கைது செய்துவிடுவோம் என போலீசார் தகவல்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24–ந் தேதி காலையில் கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் சுவாதியை மர்ம ஆசாமி ஒருவர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா எதுவும் இல்லாததால், கொலையாளியை பற்றிய எந்த துப்பும் கிடைக்கவில்லை. ரெயில் நிலையத்துக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அன்று (24–ந் தேதி) மாலையிலேயே போலீசார் வெளியிட்டனர்.
இந்த நிலையில், நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக புதிய வீடியோ காட்சி ஆதாரத்தை போலீசார் அதிகாரபூர்வமாக வெளியிட்டனர். அந்த காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் தேதி போலீசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் வந்த சந்தேகப்படக்கூடிய மர்மநபரின் உருவப்படத்தை தனியாக எடுத்து அதை பெரிதாக்கி அவரை அடையாளம் தெரிகிற வகையில் படத்தை போலீசார் தயார் செய்து விட்டதாகவும், இன்னும் 4 நாட்களில் அவனை பிடித்துவிடுவோம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply