மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு 13 ஆண்டு ஜெயில்: சுப்ரீம் கோர்ட்டு

NAJITHமாலத்தீவில், முதல்முறையாக ஜனநாயக ரீதியில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முகமது நஷீத். இவர், போலீஸ் மற்றும் ராணுவத்தினரின் புரட்சியால், 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பதவி இழந்தார். பின்னர், பயங்கரவாத குற்றச்சாட்டுகளின்பேரில், அவருக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் 13 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 

 

அதை எதிர்த்து, அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், 13 ஆண்டு ஜெயில் தண்டனையை உறுதி செய்து, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல்லா சயீத் நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை பெற்ற முகமது நஷீத், தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

 

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply