ஏமனில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டத்துக்கு 42 பேர் பலி

ஏமன் நாemanட்டின் ஹத்ரமாவ்த் மாகாணத்தில் உள்ள முகால்லா நகரில் அமைந்திருக்கும் ராணுவ முகாமில் நேற்று மாலை ராணுவ வீரர்கள் நோன்பு திறக்க காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு வழிப்போக்கன் ‘சாப்பிடுவதற்கு ஏதாவது? கிடைக்குமா?’ என்று கேட்டுள்ளான்.ராணுவ வீரர்கள் பதில் அளிப்பதற்குள் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை அந்த வழிப்போக்கன் வெடிக்கச் செய்தான். இதேபோல், ராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று மாலை முகால்லா நகரின் வேறுசில பகுதிகளில் மேலும் நான்கு பேர் தற்கொலைப் படை தாக்குதல்களை நடத்தினர்.

இதில் ஒரு குழந்தை, ஒரு பெண் மற்றும் 40 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னர், அல்-கொய்தா தீவிரவாதிகளின் பிடியில் இருந்த முகால்லா நகரை கடந்த ஏப்ரல் மாதம் அரசுப்படைகள் மீட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும், அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் சொர்க்கபூமியாக இந்த நகரம் திகழ்ந்து வருவது, குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 லட்சம் மக்கள் வாழும் முகால்லா நகரில் கடந்த மே மாதம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 47 பேர் பலியானது நினைவிருக்கலாம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply