ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவை மதிக்க வேண்டும் : ஏங்கலா மெர்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் பிரிட்டனின் முடிவு மதிக்கப்பட வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல் தெரிவித்துள்ளார்.ஆனால், எதிர்காலத்தில் சுதந்திரமான சந்தையை அணுக பிரிட்டன் விரும்பினால், மக்கள் சுதந்திரமாக போய் வருவதற்கும் அது அனுமதிக்க வேண்டும் என்று ஜெர்மானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிபோது அவர் பேசியுள்ளார்.
கடந்தகால நெருக்கடிகளில் இருந்து ஐரோப்பா மீண்டு வந்துள்ளது என்று கூறிய அவர், குடியேறிகள் போன்ற பிற சவால்களை சமாளிப்பதில் இருந்து ஐரோப்பிய ஒன்றியம் கவனத்தை திசை திருப்பிவிடக் கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply